தமிழ்நாடு படித்த வேலைவாய்ப்பற்றோர்‌ இளைஞர்‌ இயக்கம்‌

பட்டதாரிகளின் குரல்

தமிழ்நாடு படித்த வேலைவாய்ப்பற்றோர்‌ இளைஞர்‌ இயக்கம்‌

உயர்திரு M . புரட்சிவேந்தன் BA BEd.

நிறுவனத்தலைவர்

அலுவலக பணியாளர்கள்

இயக்க தோற்றமும்‌ – வளர்ச்சியும்‌

திரு.எம்‌.புரட்சிவேந்தன்‌ ஆகிய நான்‌ 1990ல்‌ பி.ஏ பட்டப்படிப்பும்‌ 1993ல்‌ பி.எட்‌, முடித்தேன்‌. நேரு யுவகேந்திர மூலம்‌ வட்டத்திலேயே சிறந்த சேவைக்கான இளைஞர்‌ விருதை 1996ஆ.ண்டு மாவட்ட ஆட்சித்‌ தலைவர் உயர்திரு.கனகராஜ்‌IAS அவர்களிடம்‌ பெற்றுள்ளேன்‌. படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல்‌ கிடைத்த வேலையை பட்டாசுவேலை.கூலிவேலை, செக்யூக்ரிட்டி,பஞ்சுமில்‌ கோழிப்பண்ணைகளில் வேலைசெய்தேன்‌. பல சமயங்களில்‌ அவமானம்‌, வெறுப்பு, கோபம்‌ இவை எல்லாம்‌ கடந்து சென்றது. அரசு ஊழியர்கள்‌ ஒன்றினைந்து தங்கள்‌ சம்பள உயர்வு, சலுகைகள்‌ கேட்டு கோரிக்கைகளுக்கு தெருவில்‌ இறங்கி போராடுவதை கண்டேன்‌.

என்னைப்‌ போல்‌ படித்துவிட்டு சமூகத்தில்‌ தகுதிக்கேற்ப வேலை
கிடைக்காமல்‌ அவமானபட்டு அவதிபட்டு மதிப்பல்லாமல்‌ வாழும்‌
இளைஞர்களை ஒன்றிணைத்து அரசிடம்‌ நாம்‌ வாழ்வாதார
வேலைவாய்ப்பக்கான கோரிக்கை வைக்கலாம்‌ என்று என்மனதில்‌
தோன்றியது அதனை வலியுறுத்தலாம்‌ என்று என்‌ மனதில்‌ தோன்றியதில்‌

உருவானது தான்‌ “தமிழ்நாடு படித்த வேலைவாய்ப்பற்றோர்‌ இளைஞர்‌ இயக்கம்‌”,

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ தான்‌ இந்த நாட்டை ஆள
வேண்டும்‌ ஏழை எளிய மாணவர்கள்‌, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ வழிதவறி செல்லாமல்‌ தடுக்க வேண்டும்‌. இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையும்‌ சுய முன்னேற்றதிற்கான வழிகாட்டுதலை செய்ய வேண்டும்‌ என்ற உயரிய எண்ணத்தில்‌ 2007ம்‌ ஆண்டில்‌ உருவாக்கியது.
தான்‌ இந்த “தமிழ்நாடு படித்த வேலைவாய்ப்பற்றோர்‌ இளைஞர்‌ இயக்கம்‌”
பதிவு எண்‌544/2007. இயக்க வளர்ச்சிக்கும்‌ வேலைவாய்ப்பற்ற
இளைஞர்களின்‌ முன்னேற்றத்திற்க்கும்‌ வேலைவாய்ப்புகள்‌ நாம்‌ நமது சமூக
கட்டுபாடுகளில்‌ பயத்துடன்‌ வாழ்கின்றோம்‌, அரசை கேள்வி கேட்டால்‌
கேசுபோடுவார்கள்‌ வேலை கிடையாது என்று பெற்றோர்களும்‌ அண்ணன்‌
தங்கை மாமா அக்கா சுற்றதரகள்‌ உறவுகாரர்கள்‌ பயமுறுத்தி
வருகின்றார்கள்‌ முதலில்‌ நமது கேள்வியும்‌ போரட்டமும்‌ அரசு
வேலைக்கவும்‌ தனியார்‌ வேலைக்காவும்‌ சுயவேலைக்கான மட்டுமேதான்‌
இருக்கும்‌ இதை புரிந்து இயக்கத்தில்‌ இணைந்து முன்வருமாறு
அனைவரையும்‌ அன்புடன்‌ அழைக்கின்றோம்‌.